வணிகங்கள் மற்றும் படைப்பாளர்களுக்கு பங்கேற்கும் வாய்ப்பு
கடை அரங்குகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், கலைஞர்கள் மற்றும் செயல்பாட்டு சேவை வழங்குநர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க பதிவு செய்யலாம். Salam Ramadan 2027, நிறுவனங்கள் தங்களின் வர்த்தகப் பெயர்களை அறிமுகப்படுத்தவும், பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தவும், ரமழான் காலத்தில் அதிகமான பார்வையாளர்களைச் சந்திக்கவும் வாய்ப்பளிக்கும்.
நிலையான அரங்குக்கான கட்டணம் ரூ. 35,000 ஆகவும், பிரீமியம் அரங்குக்கான கட்டணம் ரூ. 45,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரங்குகளின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளதால், விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பதிவு மற்றும் மேலதிக தகவல்களுக்கு நுஸ்ரத் நசீர் அவர்களை 077 344 2384 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். Salam Ramadan 2027 நிகழ்வு கொழும்பு Green Path பகுதியில் பிப்ரவரி 12 முதல் 14 வரை நடைபெறும்.































