மேலும் சிலாபம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையிலான கரையோரத்திற்கு அப்பால் அமைந்துள்ள கடல் பிராந்தியங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வானிலை தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை அவதானித்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகளை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு தங்களது அன்றாட நடவடிக்கைகளை திட்டமிடுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.




























