Fact Crescendo Sri Lanka மேற்கொண்ட விசாரணையின்படி அந்தப் பதிவுகளில் இடம்பெற்றுள்ள பெண் இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல. அவர் குவாத்தமாலாவின் Alta Verapaz மாகாணத்தில் உள்ள San Juan Chamelco பகுதியைச் சேர்ந்த Jeyme Stefanyh Hernández Reina என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் 2026 ஜூலை 11 அன்று குவாத்தமாலாவின் Cobán நகரில் நடைபெற்ற Nuestra Belleza Monja Blanca 2026–2027 என்ற உள்ளூர் அழகிப் போட்டியில் மட்டுமே பங்கேற்றிருந்தார். இது மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச போட்டி அல்ல என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் இலங்கையின் முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுகிறார் என்ற தகவலுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. அவருக்கு எதிராக சக ஆசிரியர்கள் ஒழுக்காற்று நடவடிக்கை கோரியதாக கூறப்பட்ட தகவலும் ஆதாரமற்றது என Fact Crescendo தெரிவித்துள்ளது.
எனவே குவாத்தமாலாவைச் சேர்ந்த போட்டியாளரின் புகைப்படங்களையும் காணொளிகளையும் பயன்படுத்தி அவர் இலங்கை ஆசிரியர் என சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட தகவல் தவறானதும் வழிநடத்தும் நோக்கத்துடனும் வெளியிடப்பட்ட வதந்தி என உண்மைச் சரிபார்ப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.




























