அதிகாரப்பூர்வமற்ற இணையத்தளங்கள், சமூக ஊடக இணைப்புகள், குறுந்தகவல் செயலிகள் அல்லது மூன்றாம் தரப்பு செயலி கடைகள் வழியாக செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப், குறுந்தகவல், மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகச் செய்திகளில் பகிரப்படும் இணைப்புகள் மூலம் எந்த செயலியையும் பதிவிறக்கம் செய்யுமாறு தாங்கள் ஒருபோதும் கோருவதில்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ செயலியைச் சரிபார்த்து பதிவிறக்கவும்
ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (OTP), வங்கி PIN, கிரெடிட் கார்டு விவரங்கள் அல்லது பிற நிதித் தகவல்களை நிறுவனம் கேட்பதில்லை. அதிகாரப்பூர்வ மொபைல் செயலி Apple App Store மற்றும் Google Play Store தளங்களில் மட்டுமே கிடைக்கும். பதிவிறக்கம் அல்லது புதுப்பிப்பதற்கு முன், வெளியீட்டாளர் பெயர் SriLankan Airlines Limited என உள்ளதா என்பதை பயணிகள் சரிபார்க்க வேண்டும்.
அனைத்து அதிகாரப்பூர்வ சலுகைகள், விளம்பரங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம், மொபைல் செயலி மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் வழியே மட்டுமே வழங்கப்படுகின்றன. சந்தேகத்திற்கிடமான செயலிகள் அல்லது செய்திகள் கிடைத்தால் அவற்றை நிறுவாமல், தனிப்பட்ட அல்லது கட்டணத் தகவல்களை வழங்காமல், அதிகாரப்பூர்வ தொடர்பு வழிகளில் உடனடியாகத் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SriLankan Airlines fake app scam குறித்து பயணிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.































