CRS 8 rapid response unit நகர்ப்புற வன்முறைகள், கலவரங்கள், கொள்ளைகள் மற்றும் சொத்து சேதங்களை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு காவல் பிரிவாகும். 2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது, சம்பவ இடத்துக்கு 15 நிமிடங்களில் காவலர்கள் சென்றடைய வேண்டும் என்பது உள்துறை அமைச்சகத்தின் இலக்காக இருந்தது.
24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும் காவல் பிரிவு
இந்தப் பிரிவினர் வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் பணிக்கு அழைக்கப்படலாம். தங்களது தளத்திலிருந்து 300 கிலோமீட்டர் வரையிலான பகுதிகளில் அவர்கள் செயல்பட முடியும்.
பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள எசோன் மாவட்டத்தின் பியேவ்ரில் முதல் CRS 8 பிரிவு அமைக்கப்பட்டது. அதில் 200 காவலர்கள் உள்ளனர். 2023ஆம் ஆண்டில் மார்செய், லுவார்-அட்லாண்டிக் பகுதியில் உள்ள செயின்ட்-ஹெர்ப்லான், சாசியூ மற்றும் மொன்டோபான் ஆகிய இடங்களில் மேலும் நான்கு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இவை ‘புதிய தலைமுறை’ CRS பிரிவுகள் என அழைக்கப்படுகின்றன.
CRS 8 பிரிவு சில காவலர்களுக்கு எதிரான வன்முறை குற்றச்சாட்டுகளாலும் சர்ச்சையை சந்தித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ரென்னில் ஓய்வூதியச் சீர்திருத்தத்திற்கு எதிராகப் போராடிய ஒருவர்மீது நடந்த வன்முறை தொடர்பாக இரு காவலர்களுக்கு எதிராக நீதித்துறை விசாரணை தொடங்கப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு ஏழு மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.






























