சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலையோரம் நின்றுகொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தொழிலாளர்கள் மீது மோதியது. விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
சிகிச்சை தாமதம் குறித்து குற்றச்சாட்டு
விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 6 பேர் பெண்கள். மேலும், 7 பேர் அலிஷெர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
அருகிலிருந்த தொழிற்சாலை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமானதாகவும், காயமடைந்தவர்களில் சிலர் அதிக ரத்தப்போக்கால் உயிரிழந்ததாகவும் அங்கிருந்தவர்கள் குற்றம்சாட்டினர். Punjab road accident தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.































