அமைச்சின் செயலாளர் டாக்டர் ஹர்ஷண சூரியப்பெருமா நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், இந்த நன்கொடையானது தொடர்பாடல் மற்றும் இணைய இணைப்புகளை மேம்படுத்தி, பேரிடர் காலங்களில் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேலும் திறன் வாய்ந்ததாக மேற்கொள்ள உதவும் என குறிப்பிட்டார்.
மேலும், குறித்த ஸ்டார்லிங் கருவிகள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அவற்றை பேரிடர் முகாமைத்துவ மையத்திடம் (Disaster Management Centre) ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நன்கொடையின் மூலம், அவசர நிலைகளில் தகவல் பரிமாற்றம், ஒருங்கிணைப்பு மற்றும் விரைவான முடிவெடுத்தல் செயல்முறைகள் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.































