Tag: Kankesanthurai
எதிர்வரும் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூலக் கேள்வி நேரத்தில் இதனை அறிவித்த அவர் நல்லூர், மடு மற்றும் தலதா மாளிகை போன்ற புனித தலங்கள் மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் தரிசிக்க வேண்டிய இடங்களாக இருப்பதாக குறிப்பிட்டார். வடக்கு தொடருந்துப் பாதை முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளதால் தற்போது தொடருந்துகள் […]
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் காவலில் வைத்து விசாரணை செய்ய மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணிக்கவிருந்த பயணிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது இந்தியப் பிரஜைகளான இருவரிடமிருந்து தலா 100 கிராம் தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 26 பேர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்கேன் பரிசோதனைக்கு […]
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 26 பயணிகள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று (புதன்கிழமை) சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே சேவையாற்றும் சிவகங்கை பயணிகள் கப்பல் நேற்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து 117 பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணிக்க 146 பேர் காத்திருந்த நிலையில் அவர்களில் 26 பேரை தங்கம் கடத்த முயன்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க […]