சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் 26 பயணிகள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இன்று (புதன்கிழமை) சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினம் இடையே சேவையாற்றும் சிவகங்கை பயணிகள் கப்பல் நேற்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து 117 பயணிகளுடன் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணிக்க 146 பேர் காத்திருந்த நிலையில் அவர்களில் 26 பேரை தங்கம் கடத்த முயன்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் பயணிக்க அனுமதிக்காமல் தடுத்து வைத்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள 26 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்