இதன் மூலம் பயணிகள் Navigo அட்டை அல்லது தனி டிக்கெட் வாங்காமல் தங்களது வங்கி அட்டை அல்லது ஸ்மார்ட்போனை சரிபார்ப்பு கருவியில் (validator) தொட்டு நேரடியாக பயணிக்க முடியும்.
Île-de-France Mobilités அமைப்பின் திட்டத்தின்படி முதலில் பேருந்து வலையமைப்பில் இந்த வசதி விரிவுபடுத்தப்படும். பின்னர் மெட்ரோ RER மற்றும் Transilien ரயில் நிலையங்களிலும் படிப்படியாக செயல்படுத்தப்படும். குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த Paris Transport News மாற்றம் காகித டிக்கெட்டுகள் முழுமையாக நீக்கப்படும் 2026 மாற்றங்களின் ஒரு பகுதியாகும். பயணிகளை டிஜிட்டல் முறைகளுக்கு மாற்றுவதும் டிக்கெட் வாங்கும் சிரமத்தைக் குறைப்பதும் தற்செயலான கட்டண மீறல்களைத் தடுக்கவும் இந்த திட்டம் உதவும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.





























