எச்சரிக்கையின் கீழ் உள்ள மாவட்டங்களில் Paris, Seine-et-Marne, Yvelines, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d’Oise, Ain, Rhône, Jura, Doubs, Côte-d’Or, Yonne, Allier, Puy-de-Dôme உள்ளிட்ட பல பகுதிகள் அடங்குகின்றன. இந்த கடும் வெப்ப நிலை அடுத்த வார தொடக்கம் வரை வடகிழக்கு பிராந்தியங்களில் நீடிக்கக்கூடும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தற்போதைய பிரான்சில் வெப்ப அலை ஜூன் மாதத்திற்கு மிகவும் அபூர்வமான ஒன்றாக மாறக்கூடும் என்றும் வார இறுதியில் சில பகுதிகளில் 40°C வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களிலும் வெப்பநிலை 20°C முதல் 26°C வரை நீடிக்கக்கூடும் என்பதால் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.





























