வடக்கு தொடருந்துப் பாதை முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளதால் தற்போது தொடருந்துகள் மணிக்கு 100 முதல் 110 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் என்றும் சில தொழில்நுட்ப மற்றும் வசதி குறைபாடுகள் இருந்தாலும் திருவிழாக் காலத்தில் பொதுமக்களுக்கு தடையற்ற போக்குவரத்து வசதிகளை வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை தொடருந்து பெட்டிகள் பற்றாக்குறையால் காங்கேசன்துறை – கொழும்பு தொடருந்து சேவை வாரத்தில் நான்கு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அண்மையில் அறிவித்திருந்த போதிலும் நல்லூர் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய விசேட சேவைகள் இயக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
































