Tag: Transport
Fuel Prices, ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது. இன்று (31) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் CPC தலைவர் ஜே. டி. ராஜகருண இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைகளே ஆகஸ்ட் மாதம் முழுவதும் தொடரும். அதன்படி ஆட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ.382 சூப்பர் டீசல் ரூ.478, 92 ஒக்டேன் பெற்றோல் ரூ.414, 95 […]
எதிர்வரும் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூலக் கேள்வி நேரத்தில் இதனை அறிவித்த அவர் நல்லூர், மடு மற்றும் தலதா மாளிகை போன்ற புனித தலங்கள் மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் தரிசிக்க வேண்டிய இடங்களாக இருப்பதாக குறிப்பிட்டார். வடக்கு தொடருந்துப் பாதை முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளதால் தற்போது தொடருந்துகள் […]
இலங்கையில் வாகன இறக்குமதி நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் அரசாங்கம் உடனடி கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய நிதி மற்றும் இறக்குமதி விதிமுறைகள் விற்பனையாளர்களையும் பொதுமக்களையும் பாதித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் அரோஷா ரொட்ரிகோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தற்போது அமலில் உள்ள 50% கூடுதல் வரி வாகன நிதியுதவி (Leasing) மீதான கட்டுப்பாடுகள் மற்றும் இறக்குமதி நடைமுறைகள் சந்தையின் இயல்பான செயல்பாட்டை சிரமப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.குறிப்பாக […]
வெசாக் பண்டிகைக் காலத்தில் 92 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையை ரூ.36 உயர்த்திவிட்டு தற்போது பொசன் பண்டிகையை முன்னிட்டு வெறும் ரூ.20 மட்டுமே குறைத்துள்ள அரசாங்கம் மக்களை ஏமாற்றும் நாடகத்தில் ஈடுபடுவதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழிலாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா இந்த சொற்ப விலைக்குறைப்பால் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்பதால் தற்போதைய […]
Travel News, ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) பயணிகள் உரிமைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் விமானம் ரயில் பேருந்து கப்பல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சேவைகளில் பயணம் செய்பவர்களுக்கு பணத்தைத் திரும்பப் பெறுவதும் இழப்பீடு கோருவதும் எளிதாகும் வகையில் புதிய இடைக்கால அரசியல் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தற்போது European Parliament மற்றும் Council of the European Union இடையே எட்டப்பட்டுள்ள நிலையில் இது இன்னும் இறுதி சட்ட அங்கீகாரத்தை பெற வேண்டியுள்ளது. புதிய விதிகளின்படி, […]
சுவிட்சர்லாந்து ரயில் சேவை, சுவிட்சர்லாந்தின் லோசான் (Lausanne) பிரதான ரயில் நிலையத்தில் இன்று (ஜூன் 26) பிற்பகல் அனைத்து ரயில் சேவைகளும் திடீரென முழுமையாக நிறுத்தப்பட்டன. ரயில்வே உட்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதே இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர், சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே (SBB) வெளியிட்ட தகவலின்படி நிலையத்துக்குள் வந்த IC1 ரயில் ஒன்று மேல்மின் கம்பியை சேதப்படுத்தியதால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ரயில்கள் தாமதமாகவும், […]
கஹதுடுவ – தியகம வீதியில் ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று வீதியை விட்டு விலகி வயல்வெளிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து எதிரே வந்த மற்றொரு வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 17 பேர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றவர்கள் களுபோவில போதனா வைத்தியசாலை மற்றும் வேதர வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் காயமடைந்த எவரினதும் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் […]