Fuel Prices, ஆகஸ்ட் 2026 மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
இன்று (31) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் CPC தலைவர் ஜே. டி. ராஜகருண இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் விலைகளே ஆகஸ்ட் மாதம் முழுவதும் தொடரும்.
அதன்படி ஆட்டோ டீசல் ஒரு லிட்டரின் விலை ரூ.382 சூப்பர் டீசல் ரூ.478, 92 ஒக்டேன் பெற்றோல் ரூ.414, 95 ஒக்டேன் பெற்றோல் ரூ.495 மற்றும் மண்ணெண்ணெய் ரூ.285 என்ற தற்போதைய விலைகளில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படும்.
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CPC தெரிவித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் மாதத்தில் வாகன ஓட்டிகள் பொதுப் போக்குவரத்து சேவைகள் தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் தற்போதைய விலைகளிலேயே எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.













Leave a Reply