Tag: Mobile Phone
Port City Murder, கொழும்பு போர்ட் சிட்டியில் கடத்தப்பட்டு பின்னர் உயிரிழந்த நிலையில் எஹெலியகொட பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சீன பிரஜை கணினி தொடர்பான நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) நிஷாந்த டி சொய்சா நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த தகவலை வெளியிட்டார். கடந்த சில நாட்களாக கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் தொடர்பில் […]
சிறிலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மர்மமான மரணம் தொடர்பான விசாரணை 76 நாட்கள் கடந்தும் முக்கிய முன்னேற்றமின்றி இருப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. வழக்கு நேற்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கைபேசியின் பாதுகாப்பு பூட்டை (Lock) இன்னும் திறக்க முடியாததால் தடயவியல் பரிசோதனைக்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் பிரிவு (CCD) நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு பதிலளித்த […]
Sri Lanka Tamil Newsபெந்தோட்டை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகள் சுமார் ரூ.1.5 இலட்சம் மதிப்புள்ள கைப்பேசியை அதன் உரிமையாளரிடம் நேர்மையாக ஒப்படைத்த சம்பவம் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. கடந்த 2026 மே 31 ஆம் திகதி பெந்தோட்டை பாலம் அருகே போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் 60706 இஸுரு சமீர மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 79425 ரமேஷ் அரவிந்த ஆகியோர் குறித்த கைப்பேசியை கண்டெடுத்துள்ளனர். அதன் பின்னர் கைப்பேசியின் உரிமையாளர் யார் […]
பிரான்சில் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது சில département களில் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ள உடனடி ஓட்டுநர் உரிமம் (permis) இடைநீக்கம் நடைமுறையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்துடன் இணைந்த குடியுரிமை விவகார அமைச்சர் Marie-Pierre Vedrenne வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்துவது சாலை விபத்துகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். […]