Tag: Rajitha Senaratne
நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளிலும் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தாமல் உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் சேவைக்காலத்தை நீட்டிப்பதற்காக அரசாங்கம் அரசியலமைப்புத் திருத்தத்தை அவசரமாக முன்னெடுத்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் ஏற்றுமதி வருமானம் உயர்ந்த போதிலும் […]
இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு கடுமையாக கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அரசாங்கத்தின் திட்டமிடப்படாத மற்றும் அலட்சியமான நிர்வாகமே அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைகள் பேரழிவாக மாறுவதற்குக் காரணம் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் முதல் நாள் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட கைதிக் குழுக்களை உடனடியாகப் பிரித்திருந்தால் அடுத்த நாள் ஏற்பட்ட உயிரிழப்புகளும் பெரும் வன்முறையும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றார். கலவரத்தின் போது சிறை அதிகாரிகள் அமைச்சரிடம் ஆலோசனை […]
அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணை முன்னாள் ஆட்சியாளர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல்கள் மற்றும் மோசடிகளை விசாரித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவே தவிர புதிய மோசடிகளை மேற்கொள்வதற்காக அல்ல என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் சுங்கத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடுமையான கேள்விகளை எழுப்பியதுடன் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட கொள்கலன்கள் வெளியேற்றப்பட்டமை உலக […]