இதுகுறித்து ஏன் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நிலக்கரி கொள்வனவு தொடர்பான முறைகேடுகளே மின்சாரக் கட்டண உயர்வுக்கும் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கும் முக்கிய காரணம் என்றும் அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவமே தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அதேவேளை தேர்தலின்போது எளிமையான வாழ்க்கையைப் பற்றி பேசிய சிலர் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான சொத்துகளைச் சேர்த்துள்ளதாகவும் சில அமைச்சர்களின் சொத்து அதிகரிப்பு தொடர்பில் வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
மக்களின் வாழ்க்கைச் சுமைகளை குறைக்கத் தவறியுள்ள அரசாங்கம், எதிர்க்கட்சியினருக்கு எதிராக அரசியல் பழிவாங்கலில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் மக்களின் பொருளாதார வேதனையை புறக்கணிப்பது எதிர்காலத்தில் கடுமையான மக்கள் எதிர்ப்பை உருவாக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.






























