கலவரத்தின் போது சிறை அதிகாரிகள் அமைச்சரிடம் ஆலோசனை பெற முயன்றும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் கடந்த 14 மாதங்களாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நியமிக்கப்படாததால் அவசர முடிவுகளை எடுக்க அதிகாரப்பூர்வ தலைமையே இல்லாத நிலை உருவாகியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். சிறைக்கைதிகளும் மனிதர்களே என்பதையும், சிறைக்குள் நிகழும் உயிரிழப்புகள் இலங்கைக்கு சர்வதேச மனித உரிமை அரங்கில் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த மனித உரிமை மீறல்கள் எதிர்காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்தார். அதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் அதிருப்தி அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய அரசியல் தரப்புகளுடன் இணைந்து புதிய கூட்டு அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.



























