ஆடைகள் மற்றும் மத நடைமுறைகள் தொடர்பான கைதுகள்
பெண்களின் உடை விதிகளை மீறியதாகக் கூறப்படுதல், தாடி மற்றும் சிகை அலங்காரம் தொடர்பான கட்டுப்பாடுகள், கட்டாயமாகத் தொழுகையில் பங்கேற்பது மற்றும் இசைத் தடை ஆகியவற்றுடன் இந்தக் கைதுகளும் தவறான நடத்தைகளும் தொடர்புடையவை என UNAMA தெரிவித்துள்ளது. Taliban arbitrary arrests Afghanistan குறித்த அறிக்கையை தலிபான் நிர்வாகம் மறுத்துள்ளது.
தலிபான் பேச்சாளர் ஸபியுல்லா முஜாஹித், கைதுகள் சட்டத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார். UNAMA, தலிபான் அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதே காலகட்டத்தில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் தொடர்பாக நான்கு கொலைகளும் 14 தன்னிச்சைக் கைதுகளும் பதிவாகியுள்ளதாக UNAMA கூறியது. மேலும், எல்லை தாண்டிய சம்பவங்களில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 20 பேர் காயமடைந்தும் உள்ளனர். பல ஊடகங்களின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும், ஆப்கான் பெண்கள் ஐ.நா. வளாகங்களுக்குள் நுழைவது தொடர்ந்து தடுக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

































