கரசங்கால் காட்டுப்பகுதியில் நடந்த சம்பவம்
மாடம்பாக்கம் வள்ளலார் நகரைச் சேர்ந்த முகமது சதாம், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும், வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றங்களில் சரிவர ஆஜராகாமல் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். அவரைப் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரசங்கால் காட்டுப்பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்று அதிகாலை அங்கு சென்ற போலீஸ் குழுவினர், முகமது சதாமைச் சுற்றிவளைத்தனர். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியால் காவலர் ஒருவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது. சரண் அடையும்படி போலீஸார் எச்சரித்தும், அவர் தப்பியோட முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்காப்பு நடவடிக்கையாக போலீஸார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டனர். குண்டு காலில் பாய்ந்ததில் அவர் கீழே விழுந்தார். பின்னர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த Tambaram police shooting சம்பவத்துக்குப் பிறகு, அவரிடமிருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், 3 பட்டாக் கத்திகள் மற்றும் 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மணிமங்கலம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீஸாரிடமும் காயமடைந்த முகமது சதாமிடமும் விசாரணை நடத்தினார்.






























