இயற்கைப் பேரழிவு
வெள்ளத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 4,000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சவக்கிடங்குகள் நிரம்பியதால், பல உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
19 வயதான பிரக்ரித் குருங், தனது தாயின் உடலை அடையாளம் காணும் நம்பிக்கையில் ரத்த மாதிரி வழங்கினார். அவரது தந்தையின் புகைப்படத்தை அவரது சகோதரர் அடையாளம் கண்டுள்ளார்.
காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து உறவினர்கள் ரத்த மாதிரி வழங்க வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள உறவினர்களும் தங்களது டிஎன்ஏ விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புதன்கிழமை நிலவரப்படி, காணாமல் போனவர்களில் 38 பேர் ஆஸ்திரேலியர்கள் என தெரிவிக்கப்பட்டது.
மேல் ராசுவா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இதுவரை தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை.திமுரே கிராமத்தைச் சேர்ந்த 53 வயதான லக்பா கா வெள்ளத்தில் தனது தந்தை மகன் மகள் மருமகன் மருமகள். நான்கு வயது பேத்தி மற்றும் சகோதரியின் மகன் என ஏழு உறவினர்களை இழந்ததாக கூறினார்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சிக்கல்
சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதால், மலைப்பகுதிகளை அடைய பல வாரங்கள் ஆகலாம் என ஐ.நா. மதிப்பீடு தெரிவித்துள்ளது. ராசுவா வரை சாலை வழியாக நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டாலும், அதற்கு அப்பால் செல்ல முடியாத பொருட்கள் ராணுவ முகாம்களில் சேமிக்கப்படுகின்றன.
கூடாரங்கள், போர்வைகள், தார்ப்பாய்கள், கயிறுகள், வாளிகள் மற்றும் பெண்கள், கர்ப்பிணிகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. சுமார் 2,600 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டுக்கான சிகிச்சை தேவைப்படலாம். 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிந்திருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொற்றுநோய், குடிநீர் மாசுபாடு, நெரிசலான முகாம்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் அபாயம் குறித்து நிவாரண அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.
































