ரியல் எஸ்டேட்
கட்டுமானப் பணிகள் 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டம், கம்பஹாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய திட்டமிட்ட, பாதுகாப்பு வேலியால் சூழப்பட்ட குடியிருப்பு சமூகமாக உருவெடுத்துள்ளது.
13.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் திட்டத்தில். தரைத்தளத்துடன் மேலும் மூன்று தளங்களைக் கொண்ட கட்டிடங்களில் இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை வசதிகளுடன் 480 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. வீடுகளின் விலை 2.75 கோடி இலங்கை ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது.
மொத்த நிலப்பரப்பில் 20 சதவீதம் மட்டுமே அடுக்குமாடி கட்டிடங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 80 சதவீதம் பசுமைப் பகுதிகள் மற்றும் பொதுவசதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்களுக்கான வசதிகள்
திட்டத்தில் பாதுகாப்பான நுழைவுவாயில் இயற்கைச் சூழலுடன் கூடிய தோட்டங்கள் நீச்சல் குளம் உடற்பயிற்சிக் கூடம் கிளப் ஹவுஸ் நூலகம் சமூக சமையலறை சலவை வசதி. சிறு விற்பனை நிலையம் மற்றும் லைக்கம் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் குழந்தைகள் பராமரிப்பு நிலையம் ஆகியவை உள்ளன.
பொதுப் பகுதிகளுக்கான சூரிய மின்சக்தி, நிலத்தடியில் அமைக்கப்பட்ட மின்கம்பி வலையமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நீர் மறுசுழற்சி வசதிகளும் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
கையளிப்புக்கு தேவையான சட்டரீதியான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. இதில் காண்டோமினியம் முகாமைத்துவ அதிகாரசபையின் சான்றிதழ்கள், காண்டோமினியம் திட்டப் பதிவு மற்றும் பிரகடனப் பத்திரப் பதிவு ஆகியவை அடங்குகின்றன.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை Sri Lanka News பகுதியில் பார்க்கலாம்.































