சர்வதேசம்
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் நடத்தும் தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கில். அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்த புதிய “கப்பலுக்கு கப்பல்” கொள்கையின் கீழ் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரான் கடற்கரைக்கு அப்பால், அமெரிக்க கடற்படை முற்றுகைக் கோட்டுக்கு வடக்கே நங்கூரமிட்டிருந்த கப்பல்களின் இயந்திர அறைகள் மீது அமெரிக்க ட்ரோன்கள் ஏவுகணைகளை வீசியதாக கூறப்படுகிறது. வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானிய எண்ணெய் கப்பல்கள் குறிவைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடவடிக்கைகளில் சுமார் 100 இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் வான்வழிப் பாதுகாப்பு நிலைகள் ரேடார் அமைப்புகள் கடற்படை கண்ணிவெடி அமைக்கும் திறன்கள் தகவல் தொடர்பு மையங்கள். கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் தாக்குதல் ட்ரோன் ஏவுதளங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
இதனிடையே, தெற்கு ஈரானில் சிரிக் அருகே குஹெஸ்தாக் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு அருகிலுள்ள இடம் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு பதிலளித்துள்ளது.
“பொதுமக்களை அமெரிக்க ராணுவம் ஒருபோதும் குறிவைப்பதில்லை” என்று அதன் செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிம் ஹாக்கின்ஸ் தெரிவித்தார்.
குஹெஸ்தாக் பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் குறிவைக்கப்பட்டதாகவும், அருகிலிருந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. குறைந்தது நால்வர் உயிரிழந்ததாகவும், 35 பேர் தீவிரமாகக் காயமடைந்ததாகவும் ஈரான் அரசு தொலைக்காட்சி கூறியது. இந்த எண்ணிக்கைகள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
திருமண நிகழ்ச்சியின்போது குடியிருப்பு வீடு தாக்கப்பட்டதாக ஈரான் வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் இஸ்மாயில் பகாயி குற்றம்சாட்டி, ஈரான் உறுதியான பதிலடி கொடுக்கும் என தெரிவித்தார்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.
மேலும் தொடர்புடைய செய்திகளை News பகுதியில் பார்க்கலாம்.































