டாக்சி ஓட்டுநர் அளித்த தகவலால் கைது
சமூக வலைத்தளம் மூலம் அந்தச் சிறுமியுடன் ஜெயினுக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தனது உண்மையான வயது மற்றும் அடையாளத்தை மறைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயினின் வயது குறித்த உண்மை தெரியவந்ததும், சிறுமி அவரது சமூக வலைதளக் கணக்கைத் தடை செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமி அமெரிக்காவில் இருப்பதை அறிந்த ஜெயின், அவரைச் சந்திப்பதற்காக டென்னசிக்கு சென்றார். டேவிட்சன் கவுண்டியில் சிறுமி இருப்பதை அறிந்த அவர், உபெர் டாக்ஸி ஒன்றை ஏற்பாடு செய்து சிறுமியைப் பின்தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதைக் கவனித்த டாக்சி ஓட்டுநர் சந்தேகமடைந்து போலீஸாருக்கு தகவல் அளித்தார்.
போலீஸார் ஜெயினை பிடித்து விசாரித்தனர். ஆன்லைன் டேட்டிங் மூலம் அறிமுகமான பெண்ணைச் சந்தித்து பரிசு வழங்கச் சென்றதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர் பின்தொடர்ந்தவர் மைனர் பெண் என்பது தெரியவந்தது.
ஜெயின் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை காவலில் வைக்க உத்தரவிட்டது. Tennessee minor girl arrest வழக்கில், சிறுமியைச் சந்தித்து பேசித் தன்னை ஏற்றுக்கொள்ளச் செய்யலாம் என அவர் நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.






























