ஹாட்-சாவாய் பகுதியைச் சேர்ந்த Terry Kanmacher, 2023ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஒமாஹா நகரைச் சேர்ந்த Lauren Becker உடன் இணையம் வழியாக காதல் உறவில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உறவு சில மாதங்களுக்குப் பிறகு முடிவடைந்தது. இருவருக்கும் 2023ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்பு இல்லை என ஒமாஹா காவல்துறைத் தலைவர் Todd Schmaderer கூறியுள்ளார்.
ஒமாஹாவில் நடந்த கத்திக்குத்து சம்பவம்
Lauren Becker மீது மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு முன்பே தகவல் கிடைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 22ஆம் தேதி Terry Kanmacher நெப்ராஸ்காவுக்குச் சென்றார். நவம்பர் 24ஆம் தேதி காலை, குழந்தைகளுக்கான Kids Can Community Center அருகே, பணியிடத்துக்கு வெளியே Lauren Becker கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். அந்தச் சம்பவத்தை குழந்தைகள் பார்த்திருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
சம்பவத்துக்குப் பிறகு அவர் விமானம் மூலம் அமெரிக்காவை விட்டு வெளியேற முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முதலில் நவம்பர் 30ஆம் தேதிக்கான பயணச்சீட்டு வைத்திருந்த அவர், அதை முன்கூட்டியே மாற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் விமானத் தகவல்களைப் பயன்படுத்தி மினசோட்டாவின் ஹென்னெபின் கவுண்டியில் அவர் கைது செய்யப்பட்டார். Terry Kanmacher extradition hearing நடைபெறும் வரை அவர் அங்கே காவலில் வைக்கப்பட்டுள்ளார்.





























