ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ். ஆனந்தன் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நாசர், ராஜீவ் மேனன், ஜி.எம். சுரேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவு குறித்து படக்குழு அறிவிப்பு
செப்டம்பர் மாதம் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக தலைப்பிடப்படாத இப்படத்தின் முதல் தோற்றம், பிரியங்கா மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் நிறைவு பெற்ற நாள் வரையிலான காட்சிகள் அடங்கிய காணொலியையும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது. AGS 29 film shooting நிறைவடைந்த நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.
பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு பணியையும், பிரதீப் ராகவ் படத்தொகுப்பு பணியையும் மேற்கொள்கின்றனர். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

































