2026 நவம்பர் 16ஆம் தேதி அடையாளம் காணப்பட்ட இந்தச் சம்பவத்தில், சட்டபூர்வமான இணையதள ஸ்கிரிப்ட்களுக்குள் தீங்கிழைக்கும் JavaScript செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இணையதளங்களைப் பார்வையிடும் பயனர்களின் உலாவி செயல்பாடுகள் அனுமதியின்றி மேற்கொள்ளப்படுவதற்கும், தகவல்கள் திருடப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
நிறுவனங்கள் தங்கள் இணையதளங்கள் மற்றும் செயலிகளில் Optimize Web Experimentation அல்லது வெளிப்புறமாக வழங்கப்படும் JavaScript சேவைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை முதலில் கண்டறிய வேண்டும். பின்னர், தங்கள் கணக்குகள் அல்லது திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவா என்பதை Optimize நிறுவனத்திடம் உறுதி செய்ய வேண்டும்.
JavaScript கோப்புகள், திட்ட அமைப்புகள் மற்றும் முந்தைய மாற்றங்கள் பரிசோதிக்கப்பட வேண்டும். சந்தேகத்திற்கிடமான வலைப்பின்னல் இணைப்புகள், வழக்கத்திற்கு மாறான உலாவி செயல்பாடுகள் மற்றும் சந்தேகமான உள்நுழைவுகள் தொடர்பான பாதுகாப்புப் பதிவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, நிதி நடவடிக்கைகள் மற்றும் பயனர் உள்நுழைவு தகவல்களை கையாளும் இணையதளங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட Content Security Policy நடைமுறைப்படுத்துதல், மூன்றாம் தரப்பு ஸ்கிரிப்ட்களை தொடர்ந்து கண்காணித்தல், தேவையானபோது கடவுச்சொற்களை மாற்றுதல் மற்றும் அமர்வுகளை முடக்குதல் ஆகியவற்றையும் Sri Lanka CERT advisory வலியுறுத்துகிறது.
சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் உடனடியாக 101 என்ற அவசர இலக்கத்திற்கோ, 11-269 1692 என்ற தொலைபேசி எண்ணிற்கோ அல்லது info@cert.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தெரிவிக்கப்பட வேண்டும். தொடர்புடைய பாதுகாப்புப் பதிவுகள் மற்றும் சந்தேகமான கோப்புகள் விசாரணைக்காக பாதுகாக்கப்பட வேண்டும்.
































