நவம்பர் 20ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிமன்றம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான நீதிமன்ற உத்தரவுகள்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தவில்லை என்றும், தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்திய முருக பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்ததாகவும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக த.வெ.க. அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் கந்தர் மலை முழுவதையும் சி.ஆர்.பி.எப். கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், திருப்பரங்குன்றம் கோயிலை நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Thirupparankundram Deepam order, நூற்றாண்டுக்கும் மேலாக தொடரும் இந்து அமைப்புகளின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்றும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.






























