டெலிகிராம் சேனலில் தகவலை வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 2022ஆம் ஆண்டின் “பெண், வாழ்க்கை, சுதந்திரம்” போராட்ட இயக்கத்தில் பங்கேற்ற மிலாட் அர்மூன் (27), நவீத் நஜாரன் (34) ஆகியோர் அந்த வாரம் தூக்கிலிடப்படவிருந்ததாக அவர் வெளியிட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஆவணம் அதிகாரப்பூர்வ நீதித்துறை அறிவிப்பு எனக் கூறப்பட்டாலும், அதன் உண்மைத்தன்மை தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
தூக்கு தண்டனை ஒத்திவைப்பு
பின்னர் இருவரின் தூக்கு தண்டனையும் ஒத்திவைக்கப்பட்டதாக அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்தார். அந்த தகவலை வெளியிட்டதன் மூலம் இரு போராட்டக்காரர்களின் உயிரைக் காப்பாற்ற உதவியதாக Iranian journalist Mehdi Mahmoudian-க்கு மனித உரிமை அமைப்புகள் பாராட்டு தெரிவித்தன.
கைது செய்யப்பட்ட பின் அவர் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகவும், ஒப்புதல் வாக்குமூலம் பெற அவரது தலையில் பிளாஸ்டிக் பை வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கைது நேரத்தில் பாதுகாப்புப் படையினர் தன்னைத் தாக்கியதாக அவர் குடும்பத்தினரிடம் தொலைபேசியில் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திரைப்பட இயக்குநர் ஜாஃபர் பனாஹியின் “Un simple accident” படத்தின் இணை திரைக்கதை எழுத்தாளரான மக்மூதியான், தொழில்சார் நடவடிக்கைகள் காரணமாக ஏற்கனவே பலமுறை சிறையில் அடைக்கப்பட்டவர். அவர் கடைசியாக ஜனவரி 31 அன்று கைது செய்யப்பட்டு, இரண்டு வாரங்களுக்கு மேல் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
































