இதுதொடர்பான சுற்றறிக்கை நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்டது. கல்வியாண்டின் இறுதி நாள் வரை திட்டமிடப்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகள், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்கு அமைவாக நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கல்வி நடவடிக்கைகள் கால அட்டவணைப்படி தொடரும்
அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் அதிபர்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே, பாடசாலை தவணை முடியும் வரை நடைபெற வேண்டிய கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடையூறு இல்லாமல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிபர்கள் மேற்கொள்ள வேண்டும்.
Sri Lanka school term 2026 தொடர்பான இந்த அறிவிப்பின்படி, டிசம்பர் 4ஆம் திகதியுடன் நடப்பு கல்வியாண்டு முடிவடையும். அதன் பின்னர், ஜனவரி 4, 2027 அன்று புதிய கல்வியாண்டுக்கான பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.































