சட்டத்தின் முக்கிய அம்சங்களும் எதிர்ப்புகளும்
2019ஆம் ஆண்டு கியூபெக்கை ஆட்சி செய்த Coalition Avenir Quebec அரசு Bill 21 சட்டத்தை நிறைவேற்றியது. இதன்படி நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பணியிடங்களில் மதச் சின்னங்களை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது. கியூபெக் அரசு, அரசு நிறுவனங்களின் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதும், பொதுவான குடிமை அடையாளத்தை வலுப்படுத்துவதும் சட்டத்தின் நோக்கம் எனக் கூறுகிறது.
ஆனால் கனேடிய குடிமக்கள் சுதந்திர சங்கம், தேசிய கனேடிய முஸ்லிம் கவுன்சில் மற்றும் ஹிஜாப் அணியும் ஆசிரியரான இஷ்ரக் நூரெல் ஹக் உள்ளிட்டோர் இந்தச் சட்டம் மதச் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக முஸ்லிம், சீக்கிய மற்றும் யூத சமூகங்களுக்கு சமமற்ற தாக்கத்தை ஏற்படுத்துவதாக வாதிட்டுள்ளனர். இந்த வழக்கில் 50க்கும் மேற்பட்ட தரப்புகள் தலையீடு செய்துள்ளன.
Bill 21-ஐ சட்ட சவால்களில் இருந்து பாதுகாக்க, கனேடிய அரசியலமைப்பின் பிரிவு 33 எனப்படும் notwithstanding clause முன்கூட்டியே பயன்படுத்தப்பட்டது. இந்தப் பிரிவு மதம், கருத்துரிமை, சமத்துவம் உள்ளிட்ட சில உரிமைகளை அரசு தற்காலிகமாக மீற அனுமதிக்கிறது. இந்த அதிகாரத்திற்கு நீதிமன்றங்கள் வரம்பு விதிக்க வேண்டுமா என்பதும் விசாரணையின் முக்கியக் கேள்வியாக உள்ளது.
Canada Bill 21 Supreme Court case முடிவு, மத்திய மற்றும் மாகாண அரசுகள் இந்தப் பிரிவை எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நிர்ணயிக்கும் என மத்திய நீதித்துறை அமைச்சர் சீன் ஃப்ரேசர் தெரிவித்துள்ளார். இதனால் கியூபெக் சட்டத்தின் நிலை மட்டுமின்றி, கனடாவின் உரிமைகள் சாசனம், நீதித்துறை அதிகாரம் மற்றும் தேசிய ஒற்றுமை தொடர்பான விவாதங்களும் தீவிரமடையலாம்.
































