பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தபோது, பாரம்பரிய பல்கலைக்கழக வாய்ப்புகளைப் பெற முடியாத 75 சதவீத மாணவர்களுக்கான உயர்கல்விப் பாதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார். இலங்கையில் சுமார் 25 சதவீத மாணவர்களே பல்கலைக்கழகங்களில் சேருகின்றனர். தொழிற்கல்விக்கும் பட்டப்படிப்புக்கும் சமமான மதிப்பு கிடைக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கான தரக் கட்டுப்பாடு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விண்வெளிப் பொறியியல் படிப்புக்கு திட்டம்
மருத்துவ ஆராய்ச்சி மற்றும் விண்வெளிப் பொறியியல் துறைகளில் லெய்செஸ்டர் பல்கலைக்கழகம் வழங்கும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர முடியும் என பேராசிரியர் நிஷான் தெரிவித்தார். 1967ஆம் ஆண்டு முதல் பல விண்வெளிப் பயணங்களில் பல்கலைக்கழகத்தின் கருவிகள் இடம்பெற்றுள்ளதாகவும், புதன் கோள் மற்றும் வியாழனை நோக்கிய JUICE திட்டத்திலும் அது பங்கேற்பதாகவும் அவர் கூறினார்.
University of Leicester Sri Lanka திட்டம் நடைமுறைக்கு வந்தால், இலங்கையில் நேரடியாக பட்டப்படிப்புகளை நடத்துவதுடன், இணையவழிக் கல்வி மற்றும் கொழும்பில் குறுகிய நேர நேரடி வகுப்புகள் கொண்ட கலப்பு முறையும் பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் அனுராதபுரம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தெளிவான விதிமுறைகள், விரைவான நிர்வாக நடைமுறைகள் மற்றும் இருநாடுகளுக்கிடையிலான நபர்கள், வளங்கள் நகர்வுக்கான வசதிகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.






























