Muse, கேள்விகளுக்குப் பதிலளிப்பதைக் கடந்து பயனர்களுக்காக பல்வேறு பணிகளைச் செய்யும் AI Agent ஆக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்த விலை மின்சார ஒப்பந்தத்தைத் தேடுதல், பள்ளி நாட்காட்டியைத் தயாரித்தல், விடுமுறை இடங்களைத் தேடுதல் போன்ற பணிகளை இது மேற்கொள்ள முடியும். பயனர் செயலியில் இருந்து வெளியேறினாலும், பணியைத் தொடர்ந்து செய்து முடிவைத் தெரிவிக்க முடியும்.
தனியுரிமை மற்றும் தானியங்கி செயல்பாடுகள் குறித்து எச்சரிக்கை
எனினும், பயனரின் அனுமதியின்றி முன்பதிவு அல்லது கொள்முதல் செய்ய Muse-க்கு அனுமதி இல்லை. செய்தி அனுப்புதல் அல்லது சமூக வலைதளத்தில் பதிவு செய்வதற்கு முன்பும் ஒப்புதல் தேவைப்படுகிறது. மின்னஞ்சல்களைச் சுருக்கி பதில் பரிந்துரைக்கும் இந்த அமைப்பு, சில நேரங்களில் தேவைக்கு அதிகமான தகவல்களுடன் பதில்களை உருவாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Amazon நிறுவனம் தரவு பாதுகாப்பு கவலைகளை முன்வைத்து Muse-க்கு தனது சந்தை அணுகலைத் தடுத்துள்ளது. இதை உணராமல், பொருட்களைத் தேடும் பணியில் Muse நீண்ட நேரம் மீண்டும் மீண்டும் முயன்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தகவல் ஆணையர் அலுவலகம், AI உதவியாளர்கள் தவறு செய்யக்கூடும் என்றும், தானியங்கி செயல்பாடுகளில் அந்தத் தவறுகளின் தாக்கம் அதிகரிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளது.
Meta Muse AI assistant குறிப்பிட்ட அளவு வரை இலவசமாக வழங்கப்பட்டு, பின்னர் கட்டண சந்தா முறை செயல்படும். மனிதர்களின் நிர்வாக மற்றும் சிறு பணிச்சுமையைக் குறைப்பதே நோக்கம் என அமைப்பு தெரிவித்தாலும், AI முன்னேறும்போது அதை மனிதக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சவாலாக இருக்கலாம் என Meta AI பிரிவு தலைவர் Alexandr Wang கூறியுள்ளார்.































