1,000 முதல் 1,500 பேர் வரை பாதிப்பு
18 வயதைக் கடந்தவர்களும், முன்பு குடும்பத்துடன் தங்கும் உரிமை பெற்றிருந்தவர்களும் இந்த இடைநிறுத்தத்திற்குள் வருகின்றனர். குறிப்பாக, 2021 ஜூலை 20க்குப் பிறகு புதிய குடியிருப்பு அனுமதி மறுக்கப்பட்டவர்களின் கட்டாய வெளியேற்றம் நிறுத்தப்படுகிறது.
இந்த நடவடிக்கையால் 1,000 முதல் 1,500 பேர் வரை பயனடையலாம் என குடியேற்ற நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மரியா மிண்ட்ஹாமர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு விரிவான பாதுகாப்பு வழங்கும் புதிய சட்டம் 2027ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக ஸ்வீடனில் வாழ்ந்த இளைஞர்கள், அவர்களது குடும்பத்தினர் நாட்டில் தங்க அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் வெளியேற்றத்தை எதிர்கொண்ட சம்பவங்கள் பொதுமக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, ஸ்வீடன் அரசு கடந்த ஜூன் மாதம் நடைமுறை குறைபாடுள்ளதாக ஒப்புக்கொண்டது. இதற்கு முன்பும் மார்ச் மாதத்தில் இதுபோன்ற வெளியேற்றங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
2016ஆம் ஆண்டு குடியேற்ற விதிமுறை மாற்றத்துக்குப் பிறகு, 18 வயதை அடையும் முன் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து பெறாதவர்கள் பெற்றோரின் குடும்ப அடிப்படையிலான தங்கும் உரிமையை இழக்கும் நிலை ஏற்பட்டது. Sweden suspends migrant deportations நடவடிக்கை, இந்த விதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக நிவாரணமாக பார்க்கப்படுகிறது.































