கேமரா கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
பொழிச்சலூரைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் வானகரத்தில் உள்ள அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 25.11.2026 அன்று, அவர் மற்றொரு பெண் ஊழியருடன் கழிவறைக்குச் சென்றபோது, வாஷ்பேசின் அடியில் சிறிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அவர்கள் உடனடியாக நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கும் சக ஊழியர்களுக்கும் தெரிவித்தனர். பின்னர் வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பெண்கள் கழிவறைக்குச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. கேமராவை பொருத்தியவரை கண்டறிய, நிறுவனத்தின் சிசிடிவி பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.
அப்போது மேலாளராக பணியாற்றிய வன்னியராஜ் (38), சில தினங்களாக இரவு நேரங்களில் பெண்கள் கழிவறைக்குள் சென்றது பதிவாகியிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கேமராவை பொருத்தியதாக தெரியவந்தது. ஆவடியைச் சேர்ந்த வன்னியராஜை போலீஸார் கைது செய்து, ஒரு பட்டன் ஸ்பை கேமரா மற்றும் ஐபோன் உள்ளிட்ட இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர். Chennai bathroom spy camera வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


































