ஆமைகளுக்கு சிறப்பு பாதுகாப்பு
நெதர்லாந்து உணவு மற்றும் நுகர்வோர் பொருட்கள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, Vallarta mud turtles நகர முடியாதபடி ஒட்டும் டேப்பால் சுற்றப்பட்டிருந்தன. பெரும்பாலான ஆமைகள் பொம்மை கார் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் கண்டுபிடிக்கப்பட்டன. மற்ற ஆமைகள் மூடப்பட்ட காலுறைக்குள் வைத்து பயணப் பொதியில் மறைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆமைகள் மெக்சிகோவின் இயற்கை வாழிடத்திலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவை உலகின் மிகச் சிறிய நன்னீர் ஆமைகளில் அடங்கும்; முழுமையாக வளர்ந்த நிலையில் அதிகபட்சம் சுமார் 10 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். 2025ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, இயற்கைச் சூழலில் 300-க்கும் குறைவான ஆமைகளே இருப்பதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் பட்டியலில் இந்த இனம் மிகக் கடுமையான அழிவாபத்து நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிய கறுப்புச் சந்தையில் ஒரு ஆமை 10,000 அமெரிக்க டொலர் அல்லது அதற்கு மேல் விற்கப்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பயணி தொடர்ந்து காவலில் உள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் சிறப்பு பராமரிப்பு மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
































