சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் தீர்ப்பு
கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த மே 21-ம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர், கண்ணம்பாளையம் குளம் அருகிலுள்ள தென்னந்தோப்பில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணையில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்களான கார்த்தி மற்றும் மோகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி கார்த்தி சிறுமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதாகவும், மோகன் உடந்தையாக இருந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த 21 நாள்களில் 819 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வழக்கில் 68 சாட்சிகள் விசாரிக்கப்பட்டதுடன், 221 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இறுதிக்கட்ட வாதங்கள் முடிந்த நிலையில், இன்று நீதிபதி இருவரும் குற்றவாளிகள் என அறிவித்தார். Sulur child murder case-ல் தமக்கு தொடர்பில்லை என மோகன் முன்பு தெரிவித்திருந்தார்.





























