விமான நிலையத்தில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு
22 வயதுடைய இருவர் மற்றும் 33 வயதுடைய ஒருவர் உள்ளிட்ட மூன்று தாய்லாந்து நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அக்டோபர் 15ஆம் திகதி அதிகாலை சுமார் 12.30 மணியளவில் தாய் ஏர்வேஸ் விமானம் TG 307 மூலம் பாங்கொக்கில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளனர்.
மூன்று பயணப் பொதிகளில் இருந்த அழகு சாதனப் பொருட்களுக்குள் ஹாஷிஷ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது இந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் தாய்லாந்தில் சாரதிகளாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
Thai nationals arrested in Sri Lanka தொடர்பான இந்த வழக்கில், சந்தேகநபர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.































