தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் செயல்படும் A To Z தனியார் பல்நோக்கு மருத்துவமனையின் பங்குதாரர்களான டாக்டர் சரவணன் மற்றும் டாக்டர் ராமசாமி இடையே நிர்வாகப் பிரச்னை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகார்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளில் இன்ஸ்பெக்டர் சுகுமாறன் முன்னிலை வகித்ததாக கூறப்படுகிறது.
சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு
மருத்துவமனை நிர்வாக இயக்குநர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழக டிஜிபி கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி உத்தரவிட்டார். சிபிசிஐடி விசாரணையின்போது, காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ரூ.5 கோடி கேட்டதாகவும், அதில் ரூ.3.25 கோடி பணமாகவும், ரூ.1.75 கோடி காசோலையாகவும் வழங்கியதாகவும் சரவணன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பங்குதாரர்கள் மற்றும் வழக்குடன் தொடர்புடைய காவல் ஆய்வாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுகுமாறன் வீட்டில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையில் ஆவணங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது. பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக அவர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியதால் சிகிச்சையில் உள்ளார். Thanjavur inspector bribery case தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

































