இந்த மாத தொடக்கத்திலும் தென் கொரியாவின் பல பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டன. வார இறுதியில் உருவான இடியுடன் கூடிய மழை மண்டலங்கள் திங்கட்கிழமை வரை இடையூறுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மழை மண்டலங்கள் திங்கட்கிழமை கிழக்கு நோக்கி நகரும். செவ்வாய்க்கிழமை அவை படிப்படியாக வலுவிழக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவில் கனமழைக்கு காரணமான மஞ்சள் கடல் வெப்பம்
மேற்கு பகுதியில் உள்ள மஞ்சள் கடலில் உருவான தொடர் தீவிர இடியுடன் கூடிய மழை மண்டலங்களே இந்த நிலைக்கு காரணமாகக் கூறப்படுகின்றன. மஞ்சள் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை தற்போது 29C ஆக உள்ளது. இது நீண்டகால சராசரியை விட 4C அதிகமாகும். அதிக கடல் வெப்பம் புயல் மண்டலங்களுக்கு கூடுதல் வலிமை அளித்துள்ளது.
தாய்லாந்திலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மே முதல் அக்டோபர் வரை நீடிக்கும் பருவமழைக் காலத்தின் நடுப்பகுதியை நாடு கடந்து வருகிறது. பிலிப்பைன்ஸின் டார்லாக் மாகாணத்தில் ஆகஸ்ட் மாதம் நீடித்த கனமழை காரணமாக பேரிடர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு பசிபிக் பகுதியில் இந்த வாரமும் வெப்பமண்டல அமைப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. கடந்த வாரம் பாங்-லாங் புயலும் எட்டாவ் வெப்பமண்டலப் புயலும் அருகருகே உருவாகி வடக்கே நகர்ந்தன. அவை கரையைத் தொடவில்லை. பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா அருகிலுள்ள மேலும் இரண்டு அமைப்புகள் வெப்பமண்டலச் சூறாவளிகளாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதற்கு காற்றின் வேகம் மணிக்கு 63 கிலோமீட்டரை எட்ட வேண்டும்.
ஐரோப்பாவின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் வெப்பநிலை சராசரியை விட 10C உயரக்கூடும். போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் வார இறுதியில் 40C வரை வெப்பநிலை பதிவாகலாம். இது 2007ஆம் ஆண்டின் 43.1C தேசிய சாதனைக்கு சற்றுக் குறைவாகும்.




























