பயணி கைது; விசாரணை RCMP வசம் ஒப்படைப்பு
இந்த Toronto airport drug seizure சம்பவம் செப்டம்பர் 3ஆம் தேதி இடம்பெற்றது. இந்த விவரங்களை CBSA செப்டம்பர் 23ஆம் தேதி பொதுமக்களுக்கு அறிவித்தது. சம்பவத்துக்குப் பின்னர் பயணி கைது செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களுடன் ராயல் கனேடிய மவுண்டட் போலீஸ் (RCMP) வசம் ஒப்படைக்கப்பட்டார்.
CBSA வெளியிட்ட புகைப்படங்களில், மூன்று பயணப் பெட்டிகளுக்கு அருகில் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் பொதிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. எனினும், கைது செய்யப்பட்ட நபரின் அடையாளத்தை கனேடிய அதிகாரிகள் வெளியிடவில்லை.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்த விவரங்களையும் அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.































