திருச்சி பாலக்கரை அருகே தர்மநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயராஜ் சூசைநாதன் (56), ஜீயபுரம் அருகேயுள்ள போதாவூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். அவரது வகுப்பில் படித்த 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் ஜெயராஜ் சூசைநாதனை கைது செய்து, அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. Trichy teacher POCSO case-ல், ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி சண்முகப்பிரியா உத்தரவிட்டார். 7 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியருக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
































