தற்போது மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பி ஒரு உடன்பாட்டை எட்ட வேண்டும் எனவும் ட்ரம்ப் வலியுறுத்தினார். மேலும் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலை உலக எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் உருவாகியுள்ள சிக்கல்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உலக எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய கடற்பாதையான Strait of Hormuz திறந்த நிலையில் தொடர வேண்டும் என்பதிலும் பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதுகாக்க சீனாவின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் ஜனாதிபதி ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பு ஈரான் பிரச்சினையை மையமாகக் கொண்டு உலக சக்திகள் இடையே புதிய தூதரக நகர்வுகளை உருவாக்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.



























