AI சில்லுகள் முக்கிய பங்களிப்பு
அக்டோபர் 15ஆம் தேதி வெளியான நிதி அறிக்கையின்படி, நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 68.7 சதவீதம் உயர்ந்து, 763.1 பில்லியன் தைவான் டாலராக இருந்தது. இது தொடர்ந்து ஆறாவது காலாண்டாக பதிவான சாதனை லாபமாகும்.
காலாண்டு வருவாய் 46.36 பில்லியன் டாலராக இருந்தது. செயல்பாட்டு லாப விகிதம் 58.7 சதவீதமாக பதிவானது. நிறுவனத்தின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டிருந்த 58 சதவீத உச்சவரம்பையும் இது கடந்தது.
உயர் செயல்திறன் கணினித் துறை நிறுவனத்தின் வருவாயில் 68 சதவீதத்தை வழங்கி முதலிடத்தில் இருந்தது. ஸ்மார்ட்போன் பிரிவு 21 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. மூன்றாம் தலைமுறை 3 நானோமீட்டர் சிப் உற்பத்தி மட்டும் காலாண்டு வருவாயில் 33 சதவீதத்தைப் பெற்றது.
வாகனத் துறை வருவாய் முந்தைய காலாண்டைவிட 23 சதவீதம் அதிகரித்தது. இலவச பணப்புழக்கமும் 4.3 பில்லியன் டாலரிலிருந்து 14.7 பில்லியன் டாலராக உயர்ந்தது. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உற்பத்தி விரிவாக்கத்துக்காக மொத்தம் 265 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் திட்டத்தையும் நிறுவனம் முன்பே அறிவித்துள்ளது. TSMC record profit, AI உள்கட்டமைப்புக்கான முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பதை பிரதிபலிக்கிறது.































