சிம்மஸ்த கும்ப மேளாவை முன்னிட்டு, கந்தல் சதுக்கம் முதல் கோபால் மந்திர் வரையிலான சுமார் 900 மீட்டர் சாலையை 15 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக சாலையோரத்தில் இருந்த சுமார் 60 வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மசூதி இடிப்புக்கு எதிர்ப்பு; உஜ்ஜைனில் பதற்றம்
ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை மட்டும் அகற்ற நிர்வாகம் முடிவு செய்தது. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம், மசூதி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மசூதி நிர்வாகமும் குறிப்பிட்ட பகுதியை அகற்ற ஒப்புக்கொண்டு, அந்தப் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மசூதியின் மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை நடைபெற்ற பணிகளின்போது, அதிகாரிகள் உட்பட 2,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. கண்ணீர் புகைக் குண்டுகளுக்குப் பிறகும் கூட்டம் கலைக்கப்படாததால் தடியடி நடத்தப்பட்டது. இதையடுத்து உஜ்ஜைனின் சில பகுதிகளில் பதற்றம் நிலவியது.
Ujjain Shahi Mosque demolition குறித்து காங்கிரஸ் எம்.பி. இம்ரான் பிரதாப்காரி எதிர்ப்பு தெரிவித்தார். 600 ஆண்டுகள் பழமையான புராதனச் சின்னத்தை சாலை விரிவாக்கத்துக்காக அகற்றுவது குறித்து நிர்வாகம் உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டும் என்றும், விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்படுகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.































