சமூக வலைதளங்கள் மூலம் ஓட்டுநர்கள் சேர்ப்பு
கடத்தல் குழுக்கள் ஸ்னாப்சாட், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வழியாக இளம் டச்சு ஓட்டுநர்களை அணுகுகின்றன. அதிக வருமானம் கிடைக்கும் என்றும், பயணம் எளிதானது மற்றும் பாதுகாப்பானது என்றும் அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். பயணம் ஒன்றரை மணி நேரம் முதல் அதிகபட்சம் மூன்று மணி நேரம் வரை மட்டுமே நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
குரோஷியாவில் தற்போது சிறையில் உள்ள ஜோனாதன் என்ற ஓட்டுநருக்கு, புலம்பெயர்ந்தோரை அழைத்துச் செல்ல 7,000 யூரோ வழங்குவதாக கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களின் வாக்குறுதிக்கு மாறாக, போஸ்னியா–குரோஷியா எல்லையில் அவர் ஒன்பது பேரை ஒரே காரில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 120-க்கும் மேற்பட்ட டச்சு குடிமக்கள் குரோஷியாவில் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். Dutch drivers arrested in Croatia எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து யூரோபோல் கவலை தெரிவித்துள்ளது. ஓட்டுநர்களுக்கு கடத்தல் வலையமைப்பின் முழு தகவலும் தெரியாததால், முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமாகிறது என அந்த அமைப்பு கூறியுள்ளது.
முன்பு இந்த குற்றத்துக்கு 1,500 முதல் 20,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது சிறைத்தண்டனையும் வழங்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டில் பால்கன் வழியாக 12,500-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளதாகவும், இது 2024ஆம் ஆண்டை விட 42 சதவீதம் குறைவு என்றும் பிரான்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

































