மருத்துவமனையில் மீண்டும் மோதல்
நேற்று இரவு சுமார் எட்டு மணியளவில், மருத்துவமனைக்கு வெளியே ஏற்பட்ட சண்டையில் காயமடைந்த சில இளைஞர்கள் சிகிச்சைக்காக அங்கு வந்தனர். பின்னர் மருத்துவமனைக்குள் இரண்டு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர்.
மோதலைத் தடுக்க முயன்ற காவலர் கண்ணகியை, சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கருப்பு ராஜா என்பவர் தள்ளிவிட்டார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கண்ணகியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த Paramakudi woman police death சம்பவம் தொடர்பாக, கண்ணகியைத் தள்ளியதாகக் கூறப்படும் கருப்பு ராஜாவை போலீஸார் கைது செய்தனர். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். மோதலைத் தடுக்கச் சென்ற பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

































