இதேவேளை உக்ரைனின் பாதுகாப்பு சேவைகள் பள்ளிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா இரண்டு இளைஞர்களை ஆள்சேர்த்ததாக குற்றஞ்சாட்டி அவர்களை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கீரோவோகிராட் மற்றும் ஒடேசா பகுதிகளில் பள்ளிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் இரு தரப்பும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை பரிமாறிக் கொண்டிருக்கின்றன. ரஷ்ய அதிபர் Vladimir Putin போர் விரைவில் முடிவடையக்கூடும் என சுட்டிக்காட்டியிருந்தாலும் போர்நிறுத்தம் தொடர்பான உறுதியான முன்னேற்றம் இதுவரை ஏற்படவில்லை என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.



























