193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையில், தீர்மானத்துக்கு ஆதரவாக 133 நாடுகளும், எதிராக 33 நாடுகளும் வாக்களித்தன. 16 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. இதையடுத்து தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
மரண தண்டனை தொடர்பான ஐ.நா. வலியுறுத்தல்கள்
இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், ஈரான், ஈராக், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, குவைத், மாலத்தீவுகள், ஓமன் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. UN death penalty resolution, மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் அனைத்து நாடுகளும் அதை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.
மரண தண்டனையை ஏற்கெனவே ஒழித்த நாடுகள் அதை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரக்கூடாது என்றும் தீர்மானம் கேட்டுக்கொள்கிறது. மேலும், 18 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தவர்களுக்கும், வயதைத் துல்லியமாக உறுதி செய்ய முடியாதவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள், மனநலம் அல்லது அறிவுசார் குறைபாடு உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோருக்கு மரண தண்டனை விதிப்பதை கட்டுப்படுத்தவும் பொதுச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.




























