இந்த இடம் அமெரிக்கா ஈரான் மற்றும் நடுவர் நாடுகளான பாகிஸ்தான் கத்தார் ஆகியவற்றின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் 60 நாட்களுக்குள் நடைபெறவுள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
மேலும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது பொருளாதாரத் தடைகள் தொடர்பான விவாதங்கள் மற்றும் பிராந்திய அமைதியை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன. இந்த முன்னேற்றம் மத்திய கிழக்கில் பதற்றத்தை குறைத்து உலகளாவிய எரிசக்தி சந்தைகளுக்கும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

































